புதன், 2 மே, 2012

வெடி வெள்ளி...!.

 
இந்த அழகிய மயிலாம்...
டாக்டர் .டெஸ்சி தாமஸ்...
மான்கள் துள்ளும்
அடர்வனத்தில்
கருமேகங்கள் கண்டு
விழிகள் விரிக்காமல் ...
ராஜாளிபோல மேகங்களைச்
கீறிச் சீறும் ஏவுகணைகளை
இதயம் எனும் நம்பிக்கை
மேடையிலிருந்து ஏவிய மாது ...!

கக்கும் ஜ்வாலைகளைப்
பெண்களின் நெஞ்சங்களில் ...
"அஞ்சேல் " வித்தாக விதைத்து ....
தென்னை ஏணி ஏறி ...
நம்பிக்கை நட்சத்திரம் பறிக்கும்
புது வித்தை சொல்லி
வெற்றியின் பாதைக்குப்
பாலம் அமைத்த பாவைவிளக்கு ..!

விஞ்ஞானத் தளத்தில் ...
ஆயுதங்களையே
விக்கிரகங்களாக்கி
சேவித்து ...ராஜ்யதீபம் ஏற்றி
வைத்து அக்கினியைக்
குருதியாய் ...கனன்ற
உணர்வுகளை எரிவாயுவாகக் ...
காலக்காற்றை இழுத்து
தன் காலடியில் அடக்கி
மௌனப் புன்னகையில்
பூவுலகை விண்ணைத்
தாண்டி அளந்து
வர ஏவுகணை ஏவிய
தேவி புத்திரியே ...நீயொரு
அக்கினி மலர்.....!

பெண்ணினத்தின்....
எளிய இதயங்கள் ...
வலிய விருட்ச்சமாக்க
நட்சத்திரங்கள்.. உன்னோடு
ஒப்பந்தம் போட்டதோ ..?
விஞ்ஞானக் கவிஞர்கள்
வீரமகள் உனக்குப் பொன்னாடை
போர்த்தும் கவிதைகள் படைத்து
நின் சாதனைக்குத்
தரும் சான்றிதழ்களாக ..
கவிதைக் கேடயங்களே ...
நின் சரித்திர ஆவணங்கள் ..!

நின் நித்திய ஜெபம்
இழுத்து நிறுத்திய இடத்தில்
நீ விஞ்ஞானப் புத்தாடை
தரித்துச் சிரித்த பவளப்பெண்மணி ..!
இனி எழும் நங்கையர்கள் தம்
இதயச் சிறகுகளை ....வெற்றிமகள்
உனைநோக்கியே ...விரிப்பதைக்
காண்பாய்...!

நின் குடும்பம் உனக்களித்த
எல்லையற்ற சுதந்திரத்தில்
நின் குரு .."டாக்டர் அப்துல் கலாம் "...!
அவரின் கனவுகள் உருப்பெற்று
வெற்றியின் விஸ்வரூபமாக
உனது ஆணையில்....
விண்ணை நோக்கி சீறியது...!

நீண்டும் துவண்டும்
கிடக்கும் பாதையில்
புரட்சி விதைகளைத்
தூவிய புதுமைப் பெண்ணே...!
நாளை உந்தன் பெயர்
சொல்லிச் ....சொல்லித்
திறமைகள் அனைத்தும்
உயிர்த்திடுமே...!
ஒவ்வொரு வைகறையும்...
உன்னால் முடியும்...முடியும்...
என்றே ஒவ்வொருவருக்கும்
விடியும்.... இனி...! பாரதத்தின்
பெண்களுக்கோ.... நீயொரு
தேசிய வெடி வெள்ளி...!
==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக