வெள்ளி, 4 மே, 2012

சூட்சுமம்....!

ஏற்றங்கள்..... இறக்கங்கள்...
நிறைந்ததே.... வாழ்க்கை...!
நினைத்ததெல்லாம் அமைந்திடுமோ 
எவர்க்கும்  வாழ்வில்...?
கிடைத்துக்கொண்டே இருப்பதால்
மட்டும் இனிப்பதோ வாழ்க்கை..
கிடைக்கும் வழி தெரிந்துவிட்டால் ....
அதுதானா  வாழ்க்கை...?

கிடைப்பதெல்லாம் ஓரிடத்தில்
குவித்து வைப்பதா!
கிடைத்ததை எதற்குமே..... 
உதவாமல் அழிப்பதா?
ஆசை மனம் ஓடித்தேடி
சேர்த்ததெல்லாம் வாழ்வென்பதா.?
ஒன்றுக்கு நூறாய் வைத்துக் கொண்டு
வென்றேன் வாழ்வென்பதா..?

மேலேறிச் சென்றதால்
செருக்கில் வந்த வழி மறந்தது..
இறை எண்ணம் கூட தரை
இறங்கி வெளிநடந்தது 
சிறிய மனசு குறுகக் குறுக
நோய்கள் எட்டிப் பார்த்தது
வரமாய்க் கிடைத்த வாழ்வு
அன்றே வீணாய் போனது..!

சேர்த்த ஆசைப்  பொருட்கள் 
எதுவும் கூட வர மறுத்தது...
சுற்றம் சூழ வாழ்ந்த நாட்கள்
கண்ணுக்குள் மறைந்தது..
தவறு செய்த மனது அன்றே
கண்ணைத் திறக்குது..
ஞானம் வந்த வேளையில்
கூடவே ஊனம் வந்து முடங்குது .!

சேர்த்ததை பார்க்கவோ,
குவித்ததைத் தொடவோ..
கிடைத்ததை பங்கிடவோ
அங்கே இயலவில்லையே...
வாழ்ந்ததல்ல வாழ்க்கை
என கண்கள் கெட்டபின்னே..
சூரிய நமஸ்காரமாய்,,
முடிந்து.....புரிந்து போனது..!,

மீண்டும் அதே வாழ்க்கை
காண ஏங்கிக் கேட்ட பின்னே..
இறுதி மூச்சை இழக்கும்
முன்னே இறைவனும் சொன்னான்..
கிடைத்திடுமோ இனியும்
உனக்கு இதுபோல் வாழ்வு..
மறுபடியும் மாயையிலே 
நீ  சிறையிருக்க  வேண்டும்..

இதே  வீட்டின் வாசலிலே
கை ஏந்திடத்தான் வேண்டும்..
கொடுத்துப் பார்த்தேன் உனக்கு
பகிரத்  தெரியவில்லை..
பகரும்  குணத்தை ஏனோ
உன்னுள் அழுத்தி புதைத்துக் கொண்டாய்...
ஏந்தக் கொடுப்பேன் மீண்டுமிங்கு..!
கற்றிடுவாய் வாழ்வை அன்று...!
---------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக