திங்கள், 7 மே, 2012

பெண்ணைப் பெற்ற தென்றல்......!

 

கடலோடு உனக்கென்ன கோபம்....?
மழைப் பெண்ணை தர தரவென
இழுத்துக் கொண்டு....ஆக்ரோஷமாய்..
எங்கே செல்கிறாய்......தென்றலே...?
 
கண்ணீரோடு நீ செல்வதைத் தடுத்து..
எத்தனை மரங்கள் வேரோடு சாய்ந்து
சாலை மறியல் செய்து சாகிறது...
கடலரசனை...முறையிடவா...
இல்லை முற்றுகையிடவா....
உன் வேகம்.....
 
நின் மகளை வானுக்குத் 
திருப்பி அனுப்பி...
இங்கு ஆனந்த அலை 
உல்லாசம் காணும் 
கடலைரசனோடு... இன்றே..
நியாயம் பேசி ....தாயே..
மகளை விட்டுச் செல்லவா..
உன்னுள் இத்தனை வேகம்...!
 
நீங்கள் இரண்டுபட்டால்...
எங்களுக்கல்லவா திண்டாட்டம்...!
அழைக்கிறான் ஆதவன்...!
மெல்ல நட தென்றலே..
 
நீ உயர்த்திப் பிடிக்கும் ..
போர்க்கொடிக்கு....அஞ்சி...
நாங்கள்.....நாடுவோம்....
சமாதானக் கொடி.....!
வந்த வழி திரும்பாமல்...
உன் சம்பந்தி வீடு...கடந்துவிடு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக