சனி, 9 ஜூன், 2012

உயர்ந்தது உயரத்திலே

ஆயிரம் தாமரை
இதழ்கள்  விரிய 
சிரசின் மீதா..
சிம்ஹாசனம்...!

உள்ளொளிப்  பொங்கிப்
பெருகி ரீங்காரத்துடன்
ஓங்காரம்...ஞானப்
பீடத்தில் மடுடமாய்
ஊதாப்பூ..சஹஸ்ராரம்...!

கண் மூன்று கொண்டு
மத்திமமாய் சுழல் கொண்டு
உட்புகுந்து காணுங்கால்..
தீபச்சுடராய் கனல் கசிந்து
ஒளிரும்போது உட்புகும்
மனம்.. பயணிக்கும்
கத்திரிப் பூ  ஆஞ்ஞா...!

ஆன்மாவின்  ஜென்ம 
வாசனை கடத்தி..
இதமாக்கும் இன்னிசைத்
தந்தியை மீட்டிடும்..
இனிமையாய்  இசைக்கும்..
நீலக்குயில்.. விசுத்தி...!

ஞானத்தை நிறுத்தி...
வேடிக்கை காட்டும் திரை..!
மறைநான்கின் ஆதிக்கத்தில்...
ஓட்டத்தை...இதமாக்கி
இதயத்தை  ஓட்டும் 
பச்சைக் குதிரை..அநாகதம்..!

வெப்பத்தை வெளியிட்டு
தெளிவு... மயக்கம் 
தீர்த்து மருந்திட்ட மாது..
நியாய மையம் கூடிப் 
பெறும் மங்கலங்கள் 
யாவும் தரும் கஸ்துரி
மஞ்சள்.. மணிபூரகம்..!

கற்பனை குதிரையின்
கடிவாளம் கொண்டு
ஓட்டத்தை ஏற்றி சென்று
ஆறிதழ்  தொடுத்து...
செவ்வாயின் கீழ் நின்று
காக்கும் ஆதாரம் ..
ஆரஞ்சின் சுவாதிட்டானம்..!

நிர்மூலத்தை எதிர்த்து
வலிமை ஈந்து 
சீருண்டன் அமைந்து
வெப்பம் தாழ்த்தி 
அமுதம் கொடுத்து காந்தம் 
ஈர்த்து இரும்பை இளக்கும் 
இரத்தினச்  சிகப்பாய் மூலாதாரம்..!
==================================
ஜெயஸ்ரீ ஷங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக