ஞாயிறு, 6 ஜூலை, 2014

குறுங்கதைகள்

1. ஊஞ்சல் மனம்...!

அன்றைய  மெயிலைப் படித்ததும் அவனுக்குள் ஆயிரம் மலர்கள் அங்கங்கே பூத்தது போன்ற ஒரு பிரமை.
மீண்டும் மீண்டும் படித்தான்எத்தனை மாத காலக் காத்திருப்பு.
 காட் இட்.... காட் இட்...என்று தானே உரக்கக் கத்திச் சொல்லிக் கொண்டான்.
ஆனந்தக் கண்ணீரை முதன் முதலில் அனுபவித்தான்  ரவி
 மிஸ்டர் ரவிப்ளீஸ் கமின்..! அந்தப் பெண்ணின் குரலில் திடுக்கிட்டு எழுந்தவன் தனது முறைக்கான நேர்முகத்துக்கு உள்ளே நுழைந்தான்.

=====================================================================================================================================================================

2. பேத்தி என்ற உறவு 

ஹாப்பி பர்த் டே டு யூ " பாடி முடித்து  ஒன்பது எண் மெழுகுவரித்தியை  ஊதி அணைத்தாள் சுபா.
கைதட்டல்களின்  ஒலியில் சிரித்து மகிழ்ந்தாள்.. பலூன்கள் வெடித்துச் சிதறி பூமழை தூவியது..பெரிய வெனிலா கேக் சிறு சிறு துண்டுகளானது . வெட்டிய கேக்கை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிய மகளை கேள்விக் குறியோடு பார்த்தனர்அனைவரும். 

"பாட்டீ ....இந்தா பாட்டி கேக் .." என்றபடியே பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள் சுபா.

========================================================================================================================================

3.மரமும் மனமும் 


 மாமரத்தைச் ஒற்றைக் கையால் பிடித்தபடி சுற்றி வந்து விளையாடினான் பேரன் ராகுல்.

"இந்தாப்பா குருசாமி மரத்தை வெட்டிடு...இந்த வாட்டியும் காய்க்கவேயில்லை .
ஐயா .இன்னும் ஒரு வருஷம் பார்க்கலாமே?
போதும் பார்த்தது. மாமரம்னு இருந்தா மாம்பழம் காய்ச்சு கொட்டணும் ...இதும் இருக்கே பேருக்கு..அலுத்துக் கொண்டு உள்ளேசென்றார் தாத்தா.

யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்ற ராகுல் கொண்டு வந்த மாம்பழத்தை  'செல்லோ டேப்பைப்போட்டு அந்த மரத்தில் ஒட்டிவைத்துக் கொண்டிருந்தான்.

==================================================================================================================================================================================================

4.முன்னே வரும்...!

இவ என்ன பெரிய அழகியா? 
என் காதலைச் சொன்னபோது அத்தனை பேரு முன்னாடியும் என்னை எப்படி ஏளனம் செய்தாள் ? 
மனத்துள் புகைந்து கொண்டிருந்தான் மாறன்.
இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பார்த்துறேன். நான் யார்னு காமிக்கிறேன்...ஒரு பாட்டில் திராவகம் போதும்..
அவளின் வரவுக்காக கருவிக் கொண்டு காத்திருந்தான் மாறன். அவளும் தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். 
மாறனின் கைபேசி அழைத்தது.
"டேய்....உன் தங்கச்சி முகத்துல எவனோ திராவகத்தை ஊத்திட்டு ஓடிட்டாண்டா...அம்மா அலறினாள்.

===================================================================================================================================================================================================
5.நல்லன அன்றே செய்..!

அம்மா நாலு நாளா சாப்பிடலை..ஏதாச்சும் இருந்தாப் போடுங்கம்மா..!  வெளியில் அபலையின்  குரல்.

காது கேளாதவளாக தொலைக்காட்சியில் நெடுந்தொடரில் மூழ்கியிருந்தாள் மீனாட்சி.

வீட்டு வேலைக்கு வரும் பிரேமா, தன் மகனின் காலேஜ் பீஸுக்கு பணம் கடன் கேட்டபோது முகத்தை இறுக்கி வைத்து 'இல்லையே' என்றாள் .

அடுத்தநாள் மார்பிள் தரையில் வழுக்கி விழுந்த மீனாட்சி கையில் கட்டோடு படுக்கையில் கிடந்தபோது பிரேமா தான் உதவினாள்.

மீனாட்சியின்  மனத்துள் நெருடல். "பிரேமாவுக்குக்  கொடுத்திருக்கலாம்"

===========================================================================================================================================================================

6.காதல் கசுக்குதையா.

காதலர்கள் இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வெளியூர் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

இப்போ எங்கே போறோம் கார்த்தி?

இந்த பஸ் சென்னை போகுது..பேசாமல் அங்கேயே  போகலாம் ப்ரியா.

பேருந்தில் 'காதல்' திரைப்படம் ஓடுகிறது.

பார்த்துக் கொண்டே வந்த இருவர் மனமும் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்கிறது.

'காதல்' திரைப்படம் முடிகிறது.

இருவரின் மனமும்  மௌனமாகிறது.

இறங்கியவர்கள் மீண்டும் ஏறிய இடத்திற்கே செல்ல பஸ்ஸுக்காக விரைந்து செல்கின்றனர்.

============================================================================================================================================================================

7.கண்ணனின் கண்கள்..!

அங்கே பாரு  நிலா..இன்னிக்கி 'ஃபுல் மூன் டேஎன்கிறாள். ..

கண்ணு இல்லதாவங்களுக்கும் இந்த 'மூன்தெரியுமா மம்மி...மகனின் கேள்வி.

தெரியாது என்று சொல்லி அவனது கண்களை மூடிக் காண்பிக்கிறாள் பிரணதி.'இப்போ உனக்குத் தெரியுதா சொல்லு"

...காட்..தெரியலை மம்மி..அப்போ பக்கத்து வீட்டு கண்ணனுக்கு கண்ணில்லையே ,சாமி கண்ணைக் குத்திடிச்சா மம்மி..

திடுக்கிட்டவளாக ,  சாமி அப்படியெல்லாம் செய்யாது.  என்கிறாள்.

சாமிக்கு கண்ணு இல்லைன்னு கண்ணனோட கண்ணை சாமியே  வெச்சுக்கிச்சா மம்மி...!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

8.கலியுகக் கர்ணன் 


அப்பா.....காருல மாயா பஜாருக்கு கூட்டீட்டு போப்பா.

சரிடா ராஜா...!

வருபோது 'மால்' போகலாம்  'அங்க்ரி பர்ட்ஸ்' சிடி வாங்கலாமா?

போத்தீஸ்ல "ஸ்பைடர்மேன் டிரெஸ் ..?

ட்ரிபிள் சண்டே ஐஸ்க்ரீம்..!


காரின் சக்கரங்களும் , கிரெடிட் கார்டும் சேர்ந்து தேய,

மறுநாள் பள்ளியில் நண்பனிடம் சொல்கிறான்..

எங்கப்பா ஒரு "மாஜிக் கார்டு" வெச்சிருக்காருடா. அதை எடுத்துக்கிட்டு எங்கே போனாலும் 
வாங்குறது எல்லாம் ஃப்ரீடா.

"எங்கப்பாகிட்டேயும்  ரெண்டு மாஜிக் கார்டு இருக்குடா...!"

  =====================================================================================================================================

9. பள்ளிக்கூடம் போகலாமா?

சார் இன்னைக்கு ஒரு மணி நேரம் பெர்மிஷன் வேணும்கணவன்  கேட்கிறான்.
சார்...இன்னைக்கு எனக்கு ஒரு மணிநேரம் பெர்மிஷன் வேணும்மனைவியும் கேட்கிறாள்.
இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள..
சீக்கிரம் ஸ்கூட்டரில் ஏறு..பரபரப்புடன் அவர்கள்.
எங்கே போகணும்
இந்தாங்க லிஸ்ட்...! அவள் ஒரு நீள காகிதத்தை எடுத்து நீட்டுகிறாள்.
பாரிஸ் கார்னர்  முழுதும் சுற்றி வந்தனர்மூச்சு விட்டபடி ஸ்கூட்டரில் ஏறினர்.
என்னோட ப்ராஜெக்ட் ஐடெம்ஸ் வாங்கியாச்சாமூன்றாவது படிக்கும் மகளின் குரல்.
================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக